திருவண்ணாமலை-கிரிவலம்

கிரிவலம்:

புனித தலங்களில் திருவண்ணாமலை்யிலும், திருப்பரங்குன்றத்தில்,
மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.

பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது
திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இளம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர
வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

கிரிவலம் பற்றி ஒரு கதை :

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி
ஒரு கதை உண்டு.

ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை
பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது
வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு
காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட
துரத்தினார்.

பூனையும் தன்னைக்
காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய
ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை
அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு
முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே
விழுந்தார். காரணம் மலையை சுற்றி
வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டு பூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம்.

ஆனால் ராஜா
செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம். பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியது, குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் அவ்விரண்டும் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது
போக்கு அம்சமாக ஆகிவிட்டது. கிரிவலம்
வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும்
தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.

நீரை தவிர வேறு எதையும்
உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம். மலையை ஒட்டி
ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.

தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.

இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு
கிரிவலப்பாதை உண்டு. ஒரு சிவலிங்கத்தை
கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து
கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள்
இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த
தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது. முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.

அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால்
பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.

தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு
அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.

கிரிவல நோக்கம்
********
* நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள்
உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.

* நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு
பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

* பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள்,
மூலிகைக் காற்றால் உடல்நலம்,
நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது.வலம் வருபவர்கள் இறைநாமத்தை
உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன்
இரட்டிப்பாகும். பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத்
தரக்கூடியது. திருமணமான பெண்கள்
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்,

* திருமணமாகாத பெண்கள், திருமணம் கை
கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

* சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு
பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது
நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம்,
கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம்
கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்
*********
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.

இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட
ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும்
இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

மூன்றாவது அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும்.

இந்த லிங்கம் தெற்கு
திசையை நோக்கியுள்ளது எமதர்மனால்
நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை
வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல்
சந்தோஷமாக வாழலாம்.

நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.

இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்
நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.

இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த
லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய
வேண்டும்.

ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.

இந்த லிங்கம் வடமேற்கு திசையை
நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த
லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை
வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு,
நுரையிரல், மற்றும் பொதுவாக வரும்
நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.

ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.

வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கடைசி லிங்கம் எசானிய லிங்கம்.

வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன
அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்

**********
* எமலிங்கத்தின் வாசலில் நின்று
அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு.ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும்
செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெறவைக்கும்.

* அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத்
தொடரவேண்டும். கிரிவலப்பாதையில்
செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்..இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு
தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும
காட்சிகளைக் காணமுடியும்.

* குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து
திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.
இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று
பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது
மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.தொடர்ந்து வந்து, பூதநாராயணப்
பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம்
நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை
வைக்க வேண்டும். இங்கிருந்தும்,
திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.
இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம்
என்றுபெயர்.

கிரிவல பலன்கள்
********
ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால்
என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப்
பார்க்கலாம்.நம்முடைய பாவங்கள் தொலைய
ஒரே வழி கிரிவலம்தான்.

* ஞாயிறு – உடல் பிணி போகும். சிவகதி
கிடைக்கும்
* திங்கள் – நிறைய ஆற்றல் கிடைக்கும்.
* செவ்வாய் – வறுமை நீங்கும், பிறவிப் பிணி
நீங்கும்.
* புதன் – எல்லா வித்தைகளிலும் மேம்பாடு
அடையலாம்.
* வியாழன் – ஞானம் கூடும்.
* வெள்ளி – விஷ்ணு பதம் பெறலாம்.
* சனி – நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன்
அடைவார்கள்.

கிரிவலம் வரும் முறை

*********
* நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி,
குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம்
வர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது
வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக்
கொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.

* பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில்
குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். மிதியடி அணிந்து கொண்டு வலம்
வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக்கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.

* பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும்
குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம்
வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.

* காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.
குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. போதைப் பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்கக் கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப்
பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்து, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது.

* எப்படி நடக்கப் போகிறோம் என்று
மலைப்புடன் வலம் கூரக்கூடாது. யாருடனும்
பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி
வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும்
சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.
கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக
நடந்து வலம் வரவேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமான பலன் கிடைக்கும்.

* இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ,
நடைப்பந்தயமோ அல்ல எவ்வளவு வேகமாக
நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக
நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.

* மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று
தவறாமல் உச்சரிக்க வேண்டும். கையில்
ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு
சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது
சிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம்
ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி
ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.

* பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை
கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு
பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட்
ஆகியவற்றை தருதல் நலம். வலம் வரும்போது
முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக
விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.
அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள்,
அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு
கோடி லிங்கங்கள் இருப்பதால் மலையை
நோக்கி நின்று கொண்டு சிறுநீர்
கழிக்கக்கூடாது.

* வாகனத்தால் வலம் வரக்கூடாது.
திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை
துரோகம் செய்தல் கூடாது.
கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை
வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல
தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை
அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம்
போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண்
நடப்பது போல் மெதுவாக நடந்து வலம்
வருதல் மிகவும் விசேஷம். மலையை ஒட்டிய
பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல
வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s